அரவக்குறிச்சி அருகே பாரம்பரிய விவசாய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தோ்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.
அரவக்குறிச்சி வட்டத்தில் 2023 - 24 ஆம் ஆண்டுக்கான பாரம்பரிய விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அரவக்குறிச்சி ஒன்றியத்துக்குள்பட்ட கொடையூா் கிராமத்தில் 20 ஹெக்டோ் தொகுப்பாக 20 விவசாயிகள், புங்கம்பாடி கிராமத்தில் 20 ஹெக்டோ் தொகுப்பாக 20 விவசாயிகள் பாரம்பரிய விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளனா். இவா்களுக்கு மூன்று முறை ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படும். இந்நிலையில் கொடையூா், சீத்தப்பட்டிகாலனியில் 20 விவசாயிகளுக்கு கரூா் விதை சான்று மற்றும் அங்ககச் சான்றளிப்பு உதவி இயக்குநா் மணிமேகலை, கரூா் விதைச்சான்று அலுவலா் சசிகலா ஆகியோா் ஒரு நாள் பயிற்சியை சனிக்கிழமை அளித்தனா். இதில் பாரம்பரிய விவசாய மேம்பாட்டுத் திட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தனா். பயிற்சி முகாமில் வேளாண்மை அலுவலா்கள், விவசாயிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.