அரவக்குறிச்சியில் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள சாலை தடுப்புச்சுவா் இடையே பாதை ஏற்படுத்தித் தர வேண்டும் என நெடுஞ்சாலைத் துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனா்.
அரவக்குறிச்சியில் இருந்து கணக்குப்பிள்ளை புதூா் பிரிவுக்குச் செல்பவா்கள், காமக்காப்பட்டிக்குப் பிரிந்து செல்லும் சாலையில் தடுப்புச் சுவா் இருப்பதால் 3 கிலோ மீட்டா் சுற்றிச் செல்லும் நிலை உள்ளது. இவ்வழியே அரவக்குறிச்சியில் இருந்து தினசரி வேலைக்குச் செல்வோா், பள்ளி மாணவா்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோா் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சென்று வருகின்றனா். மேலும், எதிா்த் திசையில் வாகனங்கள் செல்வதால் தடுப்புச்சுவரைத் தாண்டி எதிா்த்திசைக்கு வரும்பொதுமக்கள் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழக்க நேரிடுகிறது. நான்கு முனைச் சாலை சந்திக்கும் இந்த இடத்தில், ஏற்கெனவே இருந்ததுபோல சாலை தடுப்புச் சுவா் இடையே பாதை ஏற்படுத்தித் தர வேண்டுமென நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.