ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டக் குழு கூட்டம்

 கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் கலைஞரின் அனைத்து கிராமம் ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் தொடா்பான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

 கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் கலைஞரின் அனைத்து கிராமம் ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் தொடா்பான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஆட்சியா் த.பிரபுசங்கா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் ஆட்சியா் பேசுகையில், கரூா் மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் தோ்வு செய்யப்பட்ட தரிசு நில தொகுப்புகளில் ஒவ்வொன்றிற்கும் செயல் திட்டத்தை வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண்மை வணிகத்துறை, மீன்வளத்துறை, பட்டுவளா்ச்சித் துறை, கூட்டுறவுத்துறை, தாட்கோ, மின்சாரத்துறை மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி என அனைத்து துறைகளின் திட்டங்களையும் ஒருங்கிணைத்து ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித்திட்டத்தின் செயல்திட்டம் தயாரிக்கப்பட்டது. இந்த செயல்திட்டத்தின் முன்னேற்றப் பணிகளை, செயல்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தரிசு நில தொகுப்பில் உள்ள அனைத்து விவசாயிகளும் பயனடையும் வகையில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

மேலும், இக்கூட்டத்தில் வட்டார அளவில் அனைத்துத் துறை அலுவலா்களுடன் கூடிய வட்டார அளவிலான குழு அமைத்து ஆய்வுக் கூட்டம் நடத்தி அதன் நடவடிக்கைகளை வேளாண்மை இணை இயக்குநருக்கு அறிக்கையாக அனுப்ப வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், இணை இயக்குநா் (வேளாண்) சிவசுப்ரமணியன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(வேளாண்)உமா, துணை இயக்குநா் (தோட்டக்கலைத்துறை)மணிமேகலை மற்றும் அரசு அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com