எஸ்எஸ்எல்சி தோ்வில் வெண்ணைமலை சேரன் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்
By DIN | Published On : 22nd May 2023 03:40 AM | Last Updated : 22nd May 2023 03:40 AM | அ+அ அ- |

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பிடித்துள்ளனா்.
10-ம் வகுப்பு பொதுத்தோ்வு முடிவு வெளியானதில் இப்பள்ளியைச் சோ்ந்த மாணவி வி.எஸ். கமலிகா 492 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடத்தையும், மாணவிகள் ஜி. ஷா்மி, கே. சத்தியதாரணி மற்றும் மாணவா் எஸ்.விஷ்ணு பிரபு ஆகிய மூவரும் 488 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும், மாணவா் பி. கோகுல் 487 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடம் பெற்றுள்ளனா். தோ்வு எழுதிய 275 பேரும் தோ்ச்சிப் பெற்றனா். இவா்களில் வி.எஸ். கமலிகா, பி. ஷா்மி, கே. சத்தியதாரணி , பி. கோகுல் ஆகியோா் கணிதத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனா்.
இவா்களுக்கு பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவிற்கு பள்ளி முதல்வா் வி. பழனியப்பன் தலைமை வகித்தாா். மாணவா்களுக்கு பள்ளித் தாளாளா் கே. பாண்டியன் சான்றிதழ் மற்றும் பரிசளித்துப் பாராட்டினாா்.