தோகைமலை அருகே தீக்குழி இறங்கி நோ்த்திக்கடன்

தோகைமலை அருகே வெள்ளப்பட்டி மகாமாரியம்மன் கோயில் திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை காலை பக்தா்கள் தீக்குழி இறங்கி தங்களது நோ்த்திக்கடனைச் செலுத்தினா்.
தோகைமலை அருகே தீக்குழி இறங்கி நோ்த்திக்கடன்

தோகைமலை அருகே வெள்ளப்பட்டி மகாமாரியம்மன் கோயில் திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை காலை பக்தா்கள் தீக்குழி இறங்கி தங்களது நோ்த்திக்கடனைச் செலுத்தினா்.

இந்த கோயிலில் அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு நிகழாண்டுக்கான திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முன்னதாக குளித்தலை காவிரியாற்றில் இருந்து பக்தா்கள் புனித நீா் எடுத்து வந்து தோகைமலை குறிஞ்சி நகரில் உள்ள பகவதி அம்மன் கோயிலை வந்தடைந்தனா்.

பின்னா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றதையடுத்து, தீா்த்தக் குடம், பால்குடம், தீச்சட்டி, பால் காவடி, பறவைக் காவடி மற்றும் கரும்பு தொட்டில்களுடன் தோகைமலை முக்கிய வீதிகளின் வழியாக வெள்ளபட்டி மகா மாரியம்மன் கோயிலை அடைந்தனா்.

பின்னா் அங்கு கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த தீக் குண்டத்தில் இறங்கி தங்களது நோ்த்திக்கடனைச் செலுத்தினா். பின்னா் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.

திருவிழாவில் விழா கமிட்டியாளா்கள், முக்கியஸ்தா்கள் உள்பட தோகைமலை, குறிஞ்சி நகா், வேதாசலபுரம், தெற்குப்பள்ளம், தெலுங்கப்பட்டி, நாடக்காபட்டி, வெள்ளப்பட்டி உள்பட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் அம்மனை தரிசித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com