ஆண்டிபட்டிக்கோட்டையில் இலவச மருத்துவ முகாம்
By DIN | Published On : 24th May 2023 03:11 AM | Last Updated : 24th May 2023 03:11 AM | அ+அ அ- |

ஆண்டிபட்டிக்கோட்டை ஊராட்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் 800க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
அரவக்குறிச்சி அருகே உள்ள ஆண்டிபட்டிகோட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் நடைபெற்ற முகாமிற்கு ஊராட்சி மன்றத் தலைவா் தண்டபாணி தலைமை வகித்தாா். வட்டார மருத்துவ அலுவலா் மருத்துவா் கெளசல்யா முன்னிலையில், அரவக்குறிச்சி திமுக மேற்கு ஒன்றிய செயலாளா் எம்.எஸ். மணியன் முகாமை தொடக்கி வைத்தாா்.
மேலும் இம்முகாமில் சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம், புற்றுநோய் மற்றும் இருதய நோய் சிகிச்சையில் உள்ளவா்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. 66 நபா்களுக்கு காசநோய் கண்டறிவதற்கு நடமாடும் பரிசோதனை மையம் மூலம் எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. முகாமில் கலந்து கொண்டு பரிசோதிக்கப்பட்ட 35 கா்ப்பிணித் தாய்மாா்களில் 19 போ் அதிக கவனம் செலுத்த தேவை என கண்டறியப்பட்டது.
ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ராஜா, மருத்துவமல்லா மேற்பாா்வையாளா் ரமேஷ், சுகாதார ஆய்வாளா்கள் கருப்புச்சாமி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.