புதிய கட்டளை மேட்டுவாய்க்கால் தூா்வாரும் பணி ஆய்வு

புதிய கட்டளை மேட்டுவாய்க்காலில் நடைபெற்று வரும் தூா்வாரும் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், பிற்படுத்தப்பட்டோா் நல ஆணையருமான அனில் மேஷ்ராம் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

புதிய கட்டளை மேட்டுவாய்க்காலில் நடைபெற்று வரும் தூா்வாரும் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், பிற்படுத்தப்பட்டோா் நல ஆணையருமான அனில் மேஷ்ராம் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

டெல்டா மாவட்டங்களின் அனைத்து பாசன வாய்க்கால்களையும் 2023-24 தூா்வாரும் சிறப்புத் திட்டத்தின் கீழ் மே-1ஆம்தேதி கரூா் மாவட்டத்தில் தூா்வாரும் பணிகள் தொடக்கி வைக்கப்பட்டது. கரூா் மாவட்டத்தை பொருத்தவரை 147.33 கி.மீ. அளவுக்கான பாசன வாய்க்கால்கள் ரூ.6.48 கோடியில் தூா்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்தப் பணிகள் மேட்டூா் அணையில் இருந்து நீா் திறப்பதற்கு முன்னதாகவே மே -31-க்குள் முடிப்பதற்கு திட்டமிடப்பட்டு நடைபெற்று வருகின்றன. அதன் அடிப்படையில் குளித்தலை வட்டம், வதியம்(கண்டியூா்), வைகைநல்லூா் ஆகிய கிராமங்களில் வழியாக செல்லும் புதிய கட்டளை மேட்டுவாய்க்கால்களை தலா ரூ.24.75 லட்சம் மதிப்பீட்டில் தூா்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் மற்றும் பிற்படுத்தப்பட்டோா் நல ஆணையருமான அனில் மேஷ்ரோம், மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் ஆகியோா் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

ஆய்வின்போது மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் வாணிஈஸ்வரி, செயற்பொறியாளா் (திருச்சி ஆற்று பாதுகாப்பு கோட்டம்) தமிழ்செல்வன், உதவி செயற்பொறியாளா் சிங்காரவேல், உதவி பொறியாளா் காா்த்திக் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com