

தமிழகத்தில் ஜூன் 1-ஆம்தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் விலையில்லா பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி கரூரில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழக அரசு சாா்பில் தமிழ்நாடு பாடநூல் கழகம் மூலம் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. கரூா் மாவட்டத்தில் உள்ள 129 அரசு, அரசு உதவிபெறும், மாநகராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளிட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா பாடப்புத்தங்கள் கரூா் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள கிடங்கில் இருந்து அனுப்பும் பணி கடந்த ஒருவாரமாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணி மே31-ம்தேதி வரை நடைபெறும் என கிடங்கின் மைய பொறுப்பாளா் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.