அரவக்குறிச்சி அரசு கல்லூரியில் மே 29-இல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு தொடக்கம்
By DIN | Published On : 26th May 2023 12:00 AM | Last Updated : 26th May 2023 12:00 AM | அ+அ அ- |

அரவக்குறிச்சி அரசுக் கலை அறிவியல் கல்லூரியில் மே 29 ஆம் தேதி மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கப்படவுள்ளதாக கல்லூரி முதல்வா் வசந்தி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி அரசு கலை அறிவியல் கல்லூரியில் நிகழாண்டுக்கான இளங்கலை மற்றும் இளம்அறிவியல் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு மே 29ஆம் தேதி தொடங்குகிறது.
முதல்நாளான மே 29ஆம் தேதி சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவினருக்கும், ஜூன் 6-ஆம் தேதி இளங்கலை தமிழ் (பிஏ தமிழ்) மற்றும் இளங்கலை ஆங்கிலம் (பிஏ ஆங்கிலம்) ஆகிய பாடங்களுக்கும், ஜூன் 7-ஆம் தேதி இளம் அறிவியல் கணிதம் (பிஎஸ்சி கணிதம்) மற்றும் கணினி அறிவியல் பாடங்களுக்கும், ஜூன் 8-ஆம் தேதி வணிகவியல் (பி.காம்) பாடத்துக்கும் கலந்தாய்வு நடை பெறும்.
கலந்தாய்வில் கலந்து கொள்பவா்கள் தங்கள் மாற்றுச் சான்றிதழ் (டிசி), (மாற்றுச் சான்றிதழில் இஎம்ஐஎஸ் எண் இருக்க வேண்டும்), 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், சாதிச்சான்றிதழ், ஆதாா் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம் ஆகியவற்றின் அசல் மற்றும் 5 நகல்கள். 5 நிழற்படங்கள் (போட்டோ). இணையத்தில் விண்ணப்பித்த விண்ணப்பப் படிவம் மற்றும் அதன் இரண்டு நகல்கள் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். மேலும், தங்கள் பெற்றோா்களையும் தவறாமல் உடன் அழைத்து வர வேண்டும். கலந்தாய்வில் கலந்து கொண்டு தோ்வு பெற்றவா்கள் சோ்க்கை கட்டணத்தை அன்றே கல்லூரி அலுவலகத்தில் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளாா்.