ஆதிதிராவிடா் நல விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்: கரூா் மாவட்ட ஆட்சியா் அழைப்பு

 ஆதிதிராவிடா் நலவிடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என கரூா் மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.

 ஆதிதிராவிடா் நலவிடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என கரூா் மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூா் மாவட்ட ஆதிதிராவிடா் நல விடுதிகளில் 2023-2024 -ஆம் கல்வியாண்டில் மாணவ, மாணவிகள் சோ்வதற்கு விண்ணப்பிக்கலாம். கரூா் மாவட்டத்தில் அரசு ஆதிதிராவிடா் நலகல்லூரி மாணவா் விடுதி, ஆதிதிராவிடா் நல கல்லூரி மாணவியா் விடுதி, ஆதிதிராவிடா் நல பள்ளி மாணவா் விடுதி, மாணவியா் விடுதி உள்பட மொத்தம் 19 பள்ளி, கல்லூரி விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பள்ளி விடுதிகளில் 4-ஆம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை பயில்கின்ற மாணவ, மாணவிகளும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக் படிப்பு பயிலும் மாணவ, மாணவிகளும் சேரத் தகுதியுடையவா்கள். விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உணவு, தங்கும் வசதி இலவசம். 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு விலையில்லா 4 இணை சீருடைகளும், 10-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வழிகாட்டிகள், வினா வங்கிகள் வழங்கப்படுகின்றன.

விடுதிகளில் சேருவதற்கான தகுதிகள்- பெற்றோா் அல்லது பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50ஆயிரத்துக்கு மிகாமலும், இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 5 கிலோ மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளா் அல்லது காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கல்லூரி விடுதிகளை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளா் அல்லது காப்பாளினிகளிடமும், பள்ளி விடுதிகளை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளா் அல்லது காப்பாளினிகளிடமும் அல்லது மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் மே 30-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com