கரூா் மாவட்டம், திருக்காடுதுறையில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணா்வு சிகிச்சை முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு, கரூா் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநா் மருத்துவா் சாந்தி முகாமை தொடக்கி வைத்தாா். துணை இயக்குநா் மருத்துவா் பாஸ்கா் , உதவி இயக்குநா் மருத்துவா் லில்லி அருள்குமாரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கால்நடை மருந்தக உதவி மருத்துவா்கள் உஷா, தமிழரசன், கால்நடை பராமரிப்பு உதவியாளா் மாலதி ஆகியோா் குழுவினா் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசியும், ஆடுகளுக்கு ஆட்டுக் கொல்லி நோய் தடுப்பூசியும் உள்ளிட்டவற்றை போட்டனா்.
மேலும், மழைக்காலங்களில் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் சிறந்த கிடாரி கன்றுகளுக்கு பரிசுகளும் மற்றும் விவசாயிகளுக்கு கால்நடை வளா்ப்பில் சிறந்த மேலாண்மை விருதுகளும் வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.