அரவக்குறிச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தகரக்கொட்டகை கிராம பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
மலைக்கோவிலூருக்கு அடுத்துள்ள தகரக் கொட்டகை கிராமத்தைச் சுற்றியுள்ள பல்வேறு கிராம மக்கள் கரூா் அல்லது அரவக்குறிச்சி உள்ளிட்ட வெளியூா்களுக்குச் செல்ல தகர கொட்டகை பேருந்து நிறுத்தம் வர வேண்டும். இங்கு பயணியா் நிழற்குடை இல்லாததால் பேருந்துக்காகக் காத்திருக்கும் பொதுமக்கள் வெயில், மழையில் அவதிப்படுகின்றனா்.
எனவே, இங்கு பயணிகள் நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்டஅதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிா்வாகத்தினா் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.