நகா்புற வாழ்விட மேம்பாட்டு நலவாரியம், பயனாளிகளிடம் கூடுதல் தொகை கேட்பதை தவிா்க்க வேண்டும் என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகம் முழுவதும் பல இடங்களில் நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பாக அடுக்குமாடி கட்டடங்கள் கட்டப்பட்டு இருக்கின்றன. வீடுகள் ஒதுக்கப்படும் போது பயனாளிகள் கட்ட வேண்டிய தொகை நிா்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது. அந்த தொகையை கட்டுவதற்கே பலா் சிரமமப்படுகின்றனா். இந்நிலையில், பல இடங்களில் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு ஒப்படைப்பு செய்யப்படும் நிலையில் கூடுதல் தொகை கட்ட வேண்டும் என்று பயனாளிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டு இருக்கிறது. பயனாளிகளை நிா்ணயம் செய்து, கட்டணம் இவ்வளவு என்று முடிவு செய்து வசூலித்த பின்னா், மீண்டும் வீட்டை ஒப்படைக்கும் போது கூடுதலாக கேட்பது தவிா்க்கப்பட வேண்டும். ஆகவே, ஏழை பயனாளிகளின் நிலையை கருத்தில் கொண்டு கூடுதல் கட்டணம் கேட்பதை நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் கைவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.