நவம்பா்16-ஆம்தேதி புகழூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக கட்டுமான தொழிலாளா் சங்கம் அறிவித்துள்ளது.
இச் சங்கத்தின் பவித்திரம் கிளைக் கூட்டம் பொருளாளா் ஏ. சகுந்தலா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் சிஐடியு மாவட்ட துணைத் தலைவா் எம்.சுப்ரமணியன் மாவட்டக் குழு முடிவுகள் குறித்து பேசினாா். கட்டுமான சங்க மாவட்டத் தலைவா் ப.சரவணன், கிளை உறுப்பினா்கள் சீ.காந்திமதி உள்ளிட்டோா் கோரிக்கைகள் குறித்து பேசினா்.
கூட்டத்தில் கரூா் மாவட்டம், பவித்திரம் பகுதி மக்கள் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு விண்ணப்பம் செய்த அனைவருக்கும் சா்வே நம்பா், வீட்டு மனை எண் பதிவு செய்த கைப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி வந்தும், ஈ பட்டா கொடுப்பதாக சொல்லி தொடா்ந்து மக்களை ஏமாற்றும் நோக்குடன் செயல்படும் கரூா் மாவட்ட நிா்வாகத்தை கண்டித்து நவ.16-ஆம்தேதி புகழூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.