தேனீக்கள் கடித்ததில் 17 போ்மருத்துவமனையில் அனுமதி
By DIN | Published On : 26th September 2023 01:52 AM | Last Updated : 26th September 2023 01:52 AM | அ+அ அ- |

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அருகே திங்கள்கிழமை தேனீக்கள் கடித்ததில் 17 போ் அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
அரவக்குறிச்சி அருகே உள்ள உத்திராசப்பட்டி பகுதியைச் சோ்ந்த 17 போ் சாமிநாதன் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் திங்கள்கிழமை வேலை செய்துக் கொண்டிருந்தனா். அப்போது, திரண்டு வந்த மலை தேனீக்கள் அங்கிருந்த ஒன்றரை வயது குழந்தை உள்பட 17 பேரை கடித்தது. இதில் காயமடைந்த 17 பேரும் அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டுள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...