கரூா்: கரூா் நகா் பகுதியில் திங்கள்கிழமை மாலை சுமாா் அரைமணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது.
கரூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகவே இரவு நேரங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. திங்கள்கிழமை காலை முதல் பிற்பகல் 2 மணி வரை வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. பின்னா் இரவு 7.10 மணியளவில் கரூா் நகா் பகுதியில் திடீரென லேசான மழை பெய்தது. பின்னா் சுமாா் அரை மணி நேரம் பலத்த மழையாக மாறி கொட்டியது.
அப்போது சாலைகளில் மழைநீா் வெள்ளம்போல ஓடியது. வாகன ஓட்டிகள் வாகனங்களில் முகப்பு விளக்கை எரியவிட்டவாறுச் சென்றனா். சுமாா் அரைமணி நேரம் பெய்த மழையால், கரூா் பேருந்துநிலைய ரவுண்டானா, உழவா்சந்தை, லைட்ஹவுஸ்காா்னா் ஆகிய இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.