அரவக்குறிச்சி பகுதியில் விளைச்சலும், வரத்தும் குறைந்ததால், முருங்கைக்காய் கிலோ ரூ. 25-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் 5,000 ஏக்கருக்கும் மேல் முருங்கைக்காய் பயிரிட்டுள்ளனா். இப்பகுதி விவசாயிகளுக்கு முருங்கை சாகுபடி மட்டுமே தற்போது வாழ்வாதாரமாக இருந்து வருகிறது.
கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக முருங்கைக்காய் விளைச்சல் அதிகமாக இருந்ததால், கிலோ ஐந்து ரூபாய் முதல் 15 ரூபாய் வரை விலை போனது. தற்போது முருங்கைக்காய் விளைச்சல் குறைந்து, வரத்தும் குறைந்ததால் கிலோ ரூ. 25 முதல் 30 ரூபாய் வரை விலை போகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். இன்னும் ஓரிரு மாதங்களில் கிலோ ஒன்றுக்கு 100-க்கும் மேல் விலை போகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.