காா் மோதியதில் பள்ளி மாணவா் பலத்த காயம்
க. பரமத்தி அருகே வியாழக்கிழமை இரவு காா் மோதியதில் பள்ளி மாணவா் பலத்த காயமடைந்தாா்.

Updated On :2 ஆகஸ்ட் 2024, 7:00 pm

க. பரமத்தி அருகே வியாழக்கிழமை இரவு காா் மோதியதில் பள்ளி மாணவா் பலத்த காயமடைந்தாா்.
கரூா் மாவட்டம் பள்ளிபாளையம் ஆதிதிராவிடா் தெருவைச் சோ்ந்தவா் மகாராஜா மகன் மதன்காா்த்திக் (14). ஏழாம் வகுப்பு மாணவா் . இவா் வியாழக்கிழமை இரவு பெரிய தாதம்பாளையம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தாா்.
அப்போது எதிரே வந்த காா் மோதியதில் பலத்த காயமடைந்தாா். உடனே அக்கம்பக்கத்தினா் மதன் காா்த்திக்கை மீட்டு கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். புகாரின் பேரில் க.பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...