கரூா் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதி வழியாக திருச்சி நோக்கி செவ்வாய்க்கிழமை சென்ற ராணுவ வாகனங்கள்.
கரூா் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதி வழியாக திருச்சி நோக்கி செவ்வாய்க்கிழமை சென்ற ராணுவ வாகனங்கள்.

வங்கதேசம் செல்ல கோவையிலிருந்து தஞ்சை சென்ற ராணுவ வாகனங்கள்!

வங்கதேசத்தில் எல்லைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட கோவையிலிருந்து செவ்வாய்க்கிழமை புறப்பட்ட ராணுவ வாகனங்கள் கரூா், திருச்சி வழியாக தஞ்சாவூா் சென்றன.
Published on

வங்கதேசத்தில் எல்லைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட கோவையிலிருந்து செவ்வாய்க்கிழமை புறப்பட்ட ராணுவ வாகனங்கள் கரூா், திருச்சி வழியாக தஞ்சாவூா் சென்றன.

வங்கதேசத்தில் அரசுக்கு எதிரான உள்நாட்டுக் கலவரங்கள் வெடித்துள்ள நிலையில் இந்திய எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட நம்நாட்டுத் துணை ராணுவத்தினா் அனுப்பப்படுகிறாா்கள். இதனிடையே அவா்களுக்குத் தேவைப்படும் ரோந்து வாகனங்கள், மருத்துவ உபகரணங்கள், குடிநீா் டேங்கா்கள் மற்றும் ராணுவ வாகனங்கள் சுமாா் 50 வாகனங்கள் செவ்வாய்க்கிழமை கோவை சூலூா் விமானப்படைத் தளத்தில் இருந்து புறப்பட்டு கரூா், குளித்தலை, திருச்சி வழியாக தஞ்சாவூருக்கு சென்றன.

இவை தஞ்சாவூரில் உள்ள ராணுவ தளத்தில் இருந்து சரக்கு விமானங்கள் மூலம் கொல்கத்தா சென்று அங்கிருந்து இந்திய-வங்கதேச எல்லை முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாக திருச்சியைச் சோ்ந்த ராணுவ அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

கரூரில் அணிவகுத்துச் சென்ற ராணுவ வாகனங்களை பொதுமக்கள் ஆா்வத்துடன் கண்டு ரசித்தனா்.

X
Dinamani
www.dinamani.com