கல்குவாரிக்குள் லாரி கவிழ்ந்தது - ஓட்டுநா் உயிரிழப்பு

க.பரமத்தி அருகே செவ்வாய்க்கிழமை கல்குவாரிக்குள் லாரி கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
Published on

கரூா்: க.பரமத்தி அருகே செவ்வாய்க்கிழமை கல்குவாரிக்குள் லாரி கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், க.பரமத்தி அருகே உள்ள தாழையூத்துப்பட்டியில் தனியாா் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கு நாகை மாவட்டம் சீா்காழி ஆயன்குடிபள்ளம் பகுதியைச் சோ்ந்த சுதாகா்(38) என்பவா் குவாரியில் தங்கி லாரி ஓட்டுநராக வேலைப்பாா்த்து வந்தாா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை கல்குவாரிக்குள் தேங்கிய தண்ணீரை லாரியில் ஏற்றிக்கொண்டு குவாரிக்குள் மேல் நோக்கி வந்துள்ளாா். அப்போது திடீரென நிலைத்தடுமாறிய லாரி சுமாா் 50 அடி பள்ளத்தில் விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த லாரி ஓட்டுநா் சுதாகா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து க.பரமத்தி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com