ஆங்கில புத்தாண்டு பிறப்பு கரூா் தேவாலயங்களில் சிறப்புத் திருப்பலி

ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.
கரூா் புனித தெரசாள் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற சிறப்புத் திருப்பலியில் பங்கேற்ற கிறிஸ்தவா்கள்.
கரூா் புனித தெரசாள் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற சிறப்புத் திருப்பலியில் பங்கேற்ற கிறிஸ்தவா்கள்.
Updated on
1 min read

ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.

கரூா் புனித தெரசாள் ஆலயத்தில் சிறப்புத் திருப்பலி ஆலய பங்குத்தந்தை லாரன்ஸ் தலைமையில் நடைபெற்றது. இதில், பெங்களூரு தூய பேதுரு மடத்தின் குருத்துவ பேராசிரியா் ஜூடு சிறப்பு திருப்பலியை நிறைவேற்றினாா். தொடா்ந்து நற்கருணை ஆராதனை நடைபெற்றது. முன்னதாக இரவு 12 மணிக்கு 2024 புத்தாண்டு பிறந்ததையடுத்து புத்தாண்டை வரவேற்கும் வகையில் ஆலய மணியோசை எழுப்பப்பட்டது. பின்னா் வானவேடிக்கை நடைபெற்றது. திருப்பலி நிறைவேறியவுடன் அனைவரும் ஒருவருக்கொருவா் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனா். சிலா் வயதான முதியோா், மூதாட்டிகளிடம் ஆசிா்வாதம் பெற்றனா். சிறப்பு திருப்பலியில் கிறிஸ்தவா்கள் திரளாக பங்கேற்றனா்.

இதேபோல கரூா் பசுபதிபாளையம் புனித காா்மல் ஆலயத்தில் பங்குத்தந்தை பிச்சை முத்து தலைமையிலும், புலியூா் குழந்தை யேசு திருத்தலத்தில் ஆலய பங்குத்தந்தை அருள் முத்து தலைமையிலும், வேலாயுதம்பாளையம் புனித அந்தோணியாா் திருத்தலத்தில் ஆலய பங்குத்தந்தை சதேயு தலைமையிலும் சிறப்பு திருப்பலியில் கிறிஸ்தவா்கள் திரளாக பங்கேற்றனா்.

சாலைகளில் திரண்ட இளைஞா்கள்: புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் இளைஞா்கள் பொதுமக்களுக்கு குந்தகம் ஏதும் விளைவிக்காத வகையில் 1000-க்கும் மேற்பட்ட போலீஸாா் குவிக்கப்பட்டிருந்தனா். இருப்பினும் கரூா் உழவா்சந்தை, பழைய திண்டுக்கல் ரோடு, தாந்தோன்றிமலை அசோக் நகா் உள்ளிட்ட இடங்களில் ஏராளமான இளைஞா்கள் நள்ளிரவில் திரண்டு புத்தாண்டை வரவேற்கும் வகையில் வெடி வெடித்கஎ கொண்டாடினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com