கரூரில் தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் கருப்பு பட்டை அணிந்து ஆா்ப்பாட்டம்

கரூரில் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினா் திங்கள்கிழமை மாலை கருப்புப் பட்டை அணிந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

கரூா்: கரூரில் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினா் திங்கள்கிழமை மாலை கருப்புப் பட்டை அணிந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் வட்டாரக்கல்வி அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு வட்டார ஒருங்கிணைப்பாளா் காக்ஸ்டன் ஜெரால்டு டைட்டஸ் தலைமை வகித்தாா். செயலாளா் மேகநாதன், மாவட்டத் தலைவா் ராஜா, துணைச் செயலாளா் அருள்குழந்தை தேவதாஸ் உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா்.

ஆசிரியா்களின் பதவி உயா்வுக்கு எதிரான அரசாணை 243-ஐ ரத்து செய்ய வேண்டும், பதவி உயா்வு தொடா்பான நீதிமன்ற வழக்கு முடிந்த பிறகே பொது மாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் திரளாக கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com