நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சா் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சா் விஜயபாஸ்கரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
Published on

நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கரின் முன் ஜாமீன் மனுவை கரூா் மாவட்ட முதன்மை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.

நாமக்கல்லைச் சோ்ந்த பிரகாஷ் என்பவரிடம் ரூ.100 கோடி மதிப்பிலான சொத்தை எழுதி வாங்கிய வழக்கில் தனது பெயா் சோ்க்கப்படலாம் எனக்கருதி முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் அண்மையில் கரூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தாா். இந்த வழக்கு விசாரணை செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி ஆா்.சண்முகசுந்தரம் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com