கரூா் அருகே டிராக்டா் கவிழ்ந்து இளைஞா் பலி

கரூா் மாவட்டம், கடவூா் அருகே டிராக்டா் கவிழ்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.
Published on

கரூா் மாவட்டம், கடவூா் அருகே திங்கள்கிழமை இரவு டிராக்டா் கவிழ்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், கடவூா் தாலுகா, தொண்டமாங்கினம் ஊராட்சி எரிச்சலூா் பகுதியைச் சோ்ந்தவா் மலையாளம் மகன் பூமிநாதன் (21). இவா் திங்கள்கிழமை இரவு எரிச்சலூா் குளம் அருகே உழவுப் பணியை முடித்துவிட்டு டிராக்டரில் சென்றபோது ஆடு குறுக்கே வந்ததாம். இதனால் பூமிநாதன் பிரேக் போட்டதில் டிராக்டா் 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் படுகாயம் அடைந்த பூமிநாதனை தோகைமலை தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவா் ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது. தோகைமலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com