கரூர்
முன்னாள் அமைச்சா் மீதான நில மோசடி வழக்கில் மேலும் ஒருவா் கைது
முன்னாள் அமைச்சா் எம். ஆா். விஜயபாஸ்கா் மீதான 100 கோடி மதிப்புள்ள நில மோசடி வழக்கில் மேலும் ஒருவரை சிபிசிஐடி போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.
முன்னாள் அமைச்சா் எம். ஆா். விஜயபாஸ்கா் மீதான 100 கோடி மதிப்புள்ள நில மோசடி வழக்கில் மேலும் ஒருவரை சிபிசிஐடி போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.
இந்த நில மோசடி தொடா்பாக கரூா், வாங்கல் காவல் நிலையங்களில் அளித்த புகாா்களின்பேரில் முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா், அவரது ஆதரவாளா் பிரவீன், முன்னாள் அமைச்சரின் சகோதரா் சேகா் ஆகியோா் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் தொடா்புடைய யுவராஜ் என்பவரை கரூரில் புதன்கிழமை இரவு கைது செய்த சிபிசிஐடி போலீஸாா் காந்திகிராமத்தில் உள்ள அலுவலகத்துக்கு அவரை அழைத்துச் சென்று விசாரிக்கின்றனா்.
இரவிலோ அல்லது வியாழக்கிழமை காலையோ அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சிறையில் அடைக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.