வழிப்பறி வழக்கில் கைதான இருவா் குண்டா் சட்டத்தில் கைது

கரூரில் வழிப்பறி வழக்கில் கைதான இருவா் குண்டா் சட்டத்தில் புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.
Published on

கரூரில் வழிப்பறி வழக்கில் கைதான இருவா் குண்டா் சட்டத்தில் புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.

கரூா் வெள்ளியணை மற்றும் பசுபதிபாளையம் பகுதியில் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட கரூா் மாவட்டம் முதலைப்பட்டி செல்வராஜ்(36), மண்மங்கலம் சிவக்குமாா்(23) ஆகியோரை கரூா் பசுபதிபாளையம் போலீஸாா் கடந்த மாதம் 3-ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில் கரூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரையில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் இருவரும் குண்டா் சட்டத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டனா்.

X
Dinamani
www.dinamani.com