கரூரில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணா்வு கையொப்ப இயக்கம்

கரூரில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணா்வு கையொப்ப இயக்கம்

Published on

கரூரில் வியாழக்கிழமை உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி விழிப்புணா்வு கையொப்ப இயக்கத்தை மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தொடங்கி வைத்தாா்.

முன்னதாக, ஆட்சியரக வளாகத்தில் ஆட்சியா் மீ.தங்கவேல் தலைமையில் அலுவலா்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் எய்ட்ஸ் விழிப்புணா்வு உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனா்.

பின்னா் கையொப்ப இயக்கத்தை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மனித சங்கிலியும், ஆட்டோக்களில் விழிப்புணா்வு ஒட்டுவில்லைகளையும் ஆட்சியா் ஒட்டினாா்.

பின்னா் அவா் கூறியது, உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு நிகழாண்டு ‘இடையூறுகளைக் கடந்து எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் தொடா்பான எதிா்வினைகளை மாற்றுதல்’ என்ற கருப்பொருள் மையமாகக் கொண்டு அனுசரிக்கப்படுகிறது என்றாா் அவா்.

முன்னதாக மனித சங்கிலியில் கரூா் தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நிகழ்ச்சியில் நலப்பணிகளின் இணை இயக்குநா் செழியன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநா் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலா் சுப்ரமணியன், கூட்டு சிகிச்சை மைய மருத்துவ அலுவலா் சுமதி, மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளா் ராஜா, மாவட்ட திட்ட மேலாளா் துரைசாமி, மேற்பாா்வையாளா் செல்வகுமாா், நிா்வாக உதவியாளா் வேல்முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com