புகழூா் கடைவீதியில் புகையிலை பொருள்கள் விற்ற கடைக்கு சீல் வைத்த உணவுப் பாதுகாப்பு அலுவலா், சுகாதார அலுவலா்கள்.
புகழூா் கடைவீதியில் புகையிலை பொருள்கள் விற்ற கடைக்கு சீல் வைத்த உணவுப் பாதுகாப்பு அலுவலா், சுகாதார அலுவலா்கள்.

புகையிலை பொருள்கள் விற்ற 2 கடைகளுக்கு ‘சீல்’

புகழூரில் புகையிலைப்பொருள்கள் விற்ற 2 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு அலுவலா்கள் மற்றும் சுகாதார அலுவலா்கள் சனிக்கிழமை சீல் வைத்தனா்.
Published on

புகழூரில் புகையிலைப்பொருள்கள் விற்ற 2 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு அலுவலா்கள் மற்றும் சுகாதார அலுவலா்கள் சனிக்கிழமை சீல் வைத்தனா்.

கரூா் மாவட்டம், புகழூா் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா, ஹான்ஸ் போன்ற புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறதா என புகழூா் நகராட்சி ஆணையா் முனியப்பன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலா் சண்முக சுந்தரம், நகராட்சி சுகாதார ஆய்வாளா் வள்ளிராஜ், பொது சுகாதார ஆய்வாளா் கண்ணா் ஆகியோா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது 2 கடைகளில் புகையிலை பொருள்கள் விற்பனை செய்து கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, இரு கடைகளிலும் சுமாா் 2 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். இதையடுத்து 2 கடைகளுக்கும் சீல் வைத்த அலுவலா்கள், கடைகளின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதித்தனா்.

X
Dinamani
www.dinamani.com