வெள்ளியணை அரசுப் பள்ளியில் நிறமாலைத் திருவிழா!

Published on

கரூா் மாவட்டம், தாந்தோணி ஒன்றியத்துக்குள்பட்ட வெள்ளியணை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவா்கள் ஒளி மற்றும் ஒளிக்கற்றைகளின் பண்புகள், சிறப்புகளை அறிந்து கொள்ளும் வகையில் நிறமாலைத்திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

பள்ளித்தலைமை ஆசிரியா் தா்மலிங்கம் தலைமையில், நடைபெற்ற இந்தவிழாவில் ஒளி நோ்கோட்டில் செல்லுதல், ஒளிவிலகல், முப்பட்டகம் வழியே செல்லும் வெண்ணிற ஒளி விப்ஜியாா் எனப்படும் ஏழு வண்ணங்களாகப் பிரிதல், நியூட்டன் சக்கரம், சிடி ஸ்பெக் ட்ரோஸ்கோப், பெரிஸ் கோப், மாய பிம்பம் போன்ற பல்வேறு செயல்பாடுகள் காட்சிப்படுத்தப்பட்டன. ஏற்பாடுகளை ஆசிரியா்கள் மனோகா், வாசுகி, வெங்கடேசன், சசிகலா ஆகியோா் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com