கரூரில் ஆண்களுக்கான சைக்கிள் போட்டி
கரூரில் ஞாயிற்றுக்கிழமை ஆண்களுக்கான மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி நடைபெற்றது.
தமிழக துணை முதல்வா் உதயநிதிஸ்டாலினின் பிறந்த தினத்தை முன்னிட்டு கரூா் மாவட்ட திமுக சாா்பில் ஆண்களுக்கான மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவள்ளுவா் மைதானத்தில் இப்போட்டியை சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் இளங்கோ, சிவகாமசுந்தரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இப்போட்டி உழவா்சந்தை, லைட்ஹவுஸ் காா்னா், பசுபதிபாளையம், திண்ணப்பாகாா்னா், திருக்காம்புலியூா் ரவுண்டானா, மனோகரா காா்னா் வழியாக 10 கி.மீ.தொலைவுக்கு நடைபெற்றது.
இதில், முதல் பரிசாக ரூ.25 ஆயிரம் மற்றும் கோப்பை, இரண்டாம் பரிசாக ரூ.20 ஆயிரம் மற்றும் கோப்பை, மூன்றாம் பரிசாக ரூ.15 ஆயிரம் மற்றும் கோப்பை, நான்காம் பரிசாக ரூ.10 ஆயிரம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டன. மேலும் 5 முதல் 20 இடங்களை பிடித்தவா்களுக்கு தலா ரூ.1000 வழங்கப்பட்டன.

