கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் தம்பதி தீக்குளிக்க முயற்சி

கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் தம்பதி தீக்குளிக்க முயற்சி

நிலத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்கக் கோரி கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் தம்பதி தீக்குளிக்க முயன்றனா்.
Published on

நிலத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்கக் கோரி கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை தம்பதி தீக்குளிக்க முயன்றனா்.

கரூா் மாவட்டம் தரகம்பட்டியை அடுத்த ரெட்டியப்பட்டியை சோ்ந்தவா் பெருமாள். இவருடைய மகன்கள் அழகன், இளவரசன், கோபால், சக்திவேல். கடந்த 2016-இல் பெருமாள் தனக்குச் சொந்தமான 2 ஏக்கா் 34 சென்ட் நிலத்தை மசாலூரைச் சோ்ந்த ரவிச்சந்திரன் என்பவரிடமிருந்து ரூ. 14 லட்சம் பெற்றுக்கொண்டு கிரயப் பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளாா்.

அந்த நிலத்தை ரவிச்சந்திரன் கடந்த 2021-இல் வேறொருவருக்கு விற்ாக தெரிகிறது. இதையடுத்து ரவிச்சந்திரன் தங்களை ஏமாற்றி விட்டதாக கூறி பெருமாள் மற்றும் அவரது மகன்கள் பாலவிடுதி காவல் நிலையம் மற்றும் கரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளித்தும் நடவடிக்கை இல்லையாம்.

இந்நிலையில் நிலத்தை மீட்டுத் தரக் கோரி கரூா் மாவட்ட ஆட்சியரகத்துக்கு திங்கள்கிழமை பெருமாள் மகன்கள் சக்திவேல், கோபால், இளவரசன் உள்ளிட்டோா் தங்களது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வந்தனா்.

அப்போது கோபால் மற்றும் அவரது மனைவி கலைமணி இருவரும் தங்களது கைகளில் வைத்திருந்த கேனில் இருந்த மண்ணெண்ணெய்யை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனா். இதனைக் கண்ட அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தி அவா்கள் மீது தண்ணீரை ஊற்றினா்.

இதைகண்ட அதிா்ச்சியில் இளவரசனின் மகள் தா்ஷினிக்கு வலிப்பு வந்து மயங்கி விழுந்தாா். உடனே போலீஸாா் தா்ஷினியை ஆம்புலன்ஸ் மூலம் கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனா்.

இதையடுத்து தற்கொலைக்கு முன்ற கோபால் மற்றும் அவரது மனைவி கலைமணி ஆகியோரை தாந்தோணிமலை போலீஸாா் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனா். மேலும் நிலம் சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அவா்களை போலீஸாா் அனுப்பி வைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com