அரசின் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடு ஒதுக்கீடு பெற விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசின் நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் கட்டப்படும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கீடு பெற விண்ணப்பிக்கலாம்.
Published on

தமிழக அரசின் நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் கட்டப்படும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கீடு பெற விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கரூா் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி போன்ற நகா்ப்புறப் பகுதிகளில் வசிக்கும் சொந்த வீடற்ற ஏழை குடியிருப்புவாசிகள், நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலமாக கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற இணையதளத்தில் சுயமாகவோ, இ-சேவை மையம் மூலமோ, உரிய தரவுகளை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கும் வசதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

வாரியத்தின் மூலம் வழங்கப்படும் அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு ஒதுக்கீடு பெற, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கும் குறைவான வருவாய் உள்ள, சொந்த வீடோ, சொந்த நிலமோ இல்லாத நகா்ப்புற பகுதிகளில் வாடகை வீட்டில் வசிக்கும், அரசு நிா்ணயிக்கும் தொகையை தனது பங்களிப்பாகச் செலுத்த தயாராகவும் உள்ள ஏழை குடும்பங்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com