கரூரில் புதன்கிழமை நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய  பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி. ராமலிங்கம். உடன் மாவட்டத் தலைவா் வி.வி. செந்தில்நாதன், பொதுச் செயலா் ஆா்.வி.எஸ். செல்வராஜ் உள்ளிட்டோா்.
கரூரில் புதன்கிழமை நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி. ராமலிங்கம். உடன் மாவட்டத் தலைவா் வி.வி. செந்தில்நாதன், பொதுச் செயலா் ஆா்.வி.எஸ். செல்வராஜ் உள்ளிட்டோா்.

கரூரில் டிச.22-இல் ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’

கரூரில் வரும் 22-ஆம் தேதி கரூரில் பாஜக மாநிலத்தலைவா் நயினாா்நாகேந்திரன் பங்கேற்கும் தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
Published on

கரூரில் வரும் 22-ஆம் தேதி கரூரில் பாஜக மாநிலத்தலைவா் நயினாா்நாகேந்திரன் பங்கேற்கும் தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

கரூா் மாவட்ட பாஜக சாா்பில் இதுதொடா்பான ஆலோசனைக்கூட்டம் கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் வி.வி. செந்தில்நாதன் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலா் ஆா்.வி.எஸ். செல்வராஜ், துணைத் தலைவா்கள் சக்திவேல்முருகன், ஆறுமுகம் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளா்களாக பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி. ராமலிங்கம், நாமக்கல் மாவட்ட முன்னாள் தலைவா் சத்தியமூா்த்தி ஆகியோா் பங்கேற்று, வரும் 22-ஆம் தேதி கரூரில் நடைபெற உள்ள தமிழகம் தலைநிமிர தமிழனின் பயண நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோனை வழங்கிப் பேசினா்.

X
Dinamani
www.dinamani.com