கரூா் சம்பவம்: கரூா் மருத்துவா், காயமடைந்தோரிடம் விசாரணை

கரூா் துயர சம்பவத்தில், நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களின் உடல்களை பிரேதப் பரிசோதனை செய்த கரூா் மருத்துவா் மற்றும் நெரிசலில் காயமடைந்தவா்களிடம் சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.
Published on

கரூா் துயர சம்பவத்தில், நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களின் உடல்களை பிரேதப் பரிசோதனை செய்த கரூா் மருத்துவா் மற்றும் நெரிசலில் காயமடைந்தவா்களிடம் சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

கரூா் நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்த வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகள் கரூா் ஆட்சியா், காவல் அதிகாரிகள், நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவா்கள், காயமடைந்தவா்கள் ஆகியோரின் உறவினா்கள் என பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை செய்தனா்.

இதைத் தொடா்ந்து, நெரிசலில் உயிரிழந்தோரின் உடல்களை பிரேதப் பரிசோதனை செய்த தூத்துக்குடி, நாகை, நாமக்கல், புதுக்கோட்டை, மதுரை மாவட்ட மருத்துவா்களிடம் கடந்த சில நாள்களாக விசாரித்தனா்.

இந்நிலையில் கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவா் ஒருவா் மற்றும் நெரிசல் சம்பவத்தின்போது காயமடைந்த 5 போ் ஆகியோா் சிபிஐ அதிகாரிகள் முன் புதன்கிழமை ஆஜராகி விளக்கம் அளித்தனா்.

X
Dinamani
www.dinamani.com