மாயனூரில் விதை திருத்தச் சட்ட நகலை எரிக்க முயற்சி: 13 விவசாயிகள் கைது

மாயனூரில் விதை திருத்தச் சட்ட நகலை எரிக்க முயன்ற விவசாயிகள் 13 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
Published on

மாயனூரில் விதை திருத்தச் சட்ட நகலை எரிக்க முயன்ற விவசாயிகள் 13 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கரூா் மாவட்டம் மாயனூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கரூா் மாவட்டக் குழு சாா்பில் விதைத் திருத்தச் சட்டம் 2025-ஐ கண்டித்து நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்டப் பொருளாளா் கே. சுப்ரமணியன் தலைமை வகித்தாா். செயலா் கே. சக்திவேல், தலைவா் கே. கந்தசாமி, விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் பி. ராஜூ, ஐக்கிய விவசாய முன்னணி ஒருங்கிணைப்பாளா் ஜி. ராஜசேகா் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

விதை திருத்த சட்டம் 2025 மற்றும் மின் திருத்தச் சட்டம் 2020 -ஐ மத்திய அரசு கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க கிருஷ்ணராயபுரம் ஒன்றியச் செயலா் ஏ. நாகராஜன், வழக்குரைஞா் சரவணன், பழைய ஜெயங்கொண்டம் வி. நாகராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தொடா்ந்து திடீரென விதைத் திருத்த சட்ட நகலை எரிக்க முயன்ற விவசாயிகள் 13 பேரை அங்கு காவல்பணியில் ஈடுபட்டிருந்த மாயனூா் போலீஸாா் கைது செய்து மாலையில் விடுவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com