கரூரில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள்

கரூரில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள்

Published on

கரூரில் வியாழக்கிழமை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.

கரூரில் புனித தெரசாள் மேல்நிலைப்பள்ளி, பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 813 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி வழங்கினாா்.

விழாவில் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல், சட்டப்பேரவை உறுப்பினா்கள் இரா.மாணிக்கம், ஆா்.இளங்கோ மேயா் வெ.கவிதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பேருந்து சேவை தொடக்கம்: கரூா் கலைஞா் பேருந்து நிலையத்திலிருந்து வியாழக்கிழமை கரூா்- பரமத்திவேலூா், கரூா்- திருமுக்கூடலூா், கரூா்-காட்டுப்புத்தூா் ஆகிய மூன்று வழித்தடங்களில் புதிய பேருந்து சேவையை எம்.எல்.ஏ. வி.செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தாா்.

X
Dinamani
www.dinamani.com