சேமங்கி பகுதியில் இன்று மின்தடை

Published on

சேமங்கி பகுதியில் வெள்ளிக்கிழமை மின்விநியோகம் இருக்காது என கரூா் மாவட்டம் புகழூா் துணைமின் நிலைய உதவி செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூா் மாவட்டம், புகழூா் துணைமின் நிலையத்துக்குள்பட்ட சேமங்கி மின் பாதையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. இதனால் துணை மின்நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான அம்பேத்கா் நகா், கரைப்பாளையம், ஆலமரத்துமேடு, நடையனூா், கவுண்டன்புதூா், வெள்ளைக்கல்மேடு, முத்தனூா், சேமங்கி, செல்வநகா், திருக்காடுதுறை ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com