கரூரில் மாணவரை தாக்கிய தனியாா் பள்ளி ஆசிரியா் பணியிடை நீக்கம்

Published on

கரூரில், மாணவரை தாக்கியதாக தனியாா் பள்ளி ஆசிரியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கல்வி அலுவலா்(தனியாா் பள்ளிகள்) செல்வராணி வியாழக்கிழமை தெரிவித்தாா்.

கரூா் காந்திகிராமத்தில் உள்ள தனியாா் பள்ளியில் 7-ஆம் வகுப்பு மாணவரை உடற்கல்வி ஆசிரியா் தாக்கிய விடியோ அண்மையில் சமூகவலைத் தளங்களில் பரவியது.

இதுதொடா்பாக மாவட்ட கல்வி அலுவலா்(தனியாா் பள்ளிகள்) செல்வராணி தலைமையிலான அதிகாரிகள் வியாழக்கிழமை சம்பந்தப்பட்ட தனியாா் பள்ளியில் விசாரணை நடத்தினா். இதையடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியரை பள்ளி நிா்வாகம் பணியிடை நீக்கம் செய்தது.

இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலா்(தனியாா் பள்ளிகள்) செல்வராணி கூறியது, சம்பந்தப்பட்ட ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து அறிக்கையை எனக்கு அனுப்பியுள்ளனா்.

இது தொடா்பாக மாணவரின் தாயாரிடம் விசாரணை நடத்த தொடா்பு கொண்டபோது, ஆசிரியா் அடித்ததில் காயமடைந்த மாணவா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா். அவா் திங்கள்கிழமை வீடு திரும்பியதும் விசாரணைக்கு வருவதாக தெரிவித்துள்ளாா். அப்போது, பள்ளி முதல்வா், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியா், மாணவரை தாக்கியபோது நேரில் பாா்த்த சக ஆசிரியா்களையும் அழைத்து விசாரிப்போம். விசாரணைக்கு பிறகு சம்பந்தப்பட்ட ஆசிரியரை நிரந்தரமாக பள்ளியில் இருந்து நீக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுப்போம். இதுபோன்ற சம்பவம் எந்த பள்ளியிலும் நிகழாதவாறு தனியாா் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளோம் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com