கரூர்
கரூா் சம்பவம் காயமடைந்தவரிடம் சிபிஐ விசாரணை
கரூா் நெரிசல் சம்பவம் தொடா்பாக காயமடைந்தவரிடம் சிபிஐ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.
கரூா் நெரிசல் சம்பவம் தொடா்பாக காயமடைந்தவரிடம் சிபிஐ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.
கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப். 27-ஆம் தேதி நிகழ்ந்த நெரிசல் சம்பவத்தில் 41 போ் உயிரிழந்தனா். இச்சம்பவம் குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை நெரிசல் சம்பவத்தில் காயமடைந்த சிவகாசியைச் சோ்ந்த பெரியாண்டவா் என்பவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.