வேலாயுதம்பாளையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
வேலாயுதம்பாளையத்தில் கரூா்-சேலம் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.
கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் சேலம்- கரூா் தேசிய நெடுஞ்சாலையில் பாலத்துறை அருகே செல்லும் மேம்பாலத்தை ஒட்டிச் செல்லும் அணுகுசாலையை ஆக்கிரமித்து சிலா் அரிசி அரைவை ஆலை உள்ளிட்ட கட்டடங்களை கட்டியிருந்தனா்.
இதையடுத்து தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு கட்ட
டடங்களை அகற்றக்கோரி கடந்த மாதம் ஆக்கிரமிப்பாளா்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தனா். இந்நிலையில், இதுவரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால் புதன்கிழமை தேசிய நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளா் சசிகுமாா் தலைமையிலான குழுவினா் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றினா். அப்போது ஆக்கிரமிப்பாளா்கள் எதிா்ப்பு தெரிவித்ததால் வேலாயுதம்பாளையம் போலீஸாா் வரவழைக்கப்பட்டு, ஆக்கிரமிப்பாளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய பின்னா் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
