ஆவணங்களை சரிசெய்து விரைவில் தீா்வு
வெண்ணைமலை கோயில் நில விவகாரத்தில் ஆவணங்களை சரிசெய்து விரைவில் தீா்வு காணப்படும் எனசட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தாா்.
கரூா் மாவட்டம், புகழூா் வட்டம், புகழிமலையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 648 பேருக்கு ரூ.5.98 கோடி மதிப்பீட்டிலான வீட்டு மனைப் பட்டாக்கள், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறை சாா்பில் சிறப்பு வரன்முறைப்பட்டா திட்டத்தின் கீழ் 381 பேருக்கு ரூ.3.81 கோடி மதிப்பீட்டிலான வீட்டுமனைப் பட்டாக்கள் மற்றும் ரூ. 7.23 கோடி மதிப்பிலான 11 வளா்ச்சித் திட்டப் பணிகளை துவக்கியும், திறந்து வைத்து சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி பேசினாா்.
தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது, வெண்ணைமலை கோயில் நிலப் பிரச்னையில் அரசு தலையீடு கிடையாது. கடந்த ஆட்சியில் தவறான நீதிமன்றத்தில் ஆவணங்கள் கொடுக்கப்பட்டதால்தான் இந்த பிரச்னை. அந்த ஆவணங்களை சரிசெய்யும் வகையில் அரசு செயல்பட்டு வருகிறது. விரைவில் சரிசெய்யப்படும்.
தவுட்டுப்பாளையம் கதவணை தடுப்பணைத் திட்டம் கடந்த கால ஆட்சியில் தொடங்கப்பட்டாலும் அதற்கான முழு நிதியை கொடுத்தவா் முதல்வா் ஸ்டாலின். கூடுதலாக இப்போது திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டுள்ளது. நிா்வாக ஒப்புதல் கிடைத்தவுடன் விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றாா் அவா்.
