கரூரில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு உயா்நிலை-மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் சங்கத்தின் மாநிலத் தலைவா் ஆ. மலைகொழுந்தன்.
கரூரில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு உயா்நிலை-மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் சங்கத்தின் மாநிலத் தலைவா் ஆ. மலைகொழுந்தன்.

‘அரசுப் பள்ளி ஆசிரியா்கள் மீதான பாலியல் புகாரில் உண்மையை உறுதி செய்த பிறகே வழக்குப் பதிய வேண்டும்’

அரசுப் பள்ளி ஆசிரியா்கள் மீதான பாலியல் புகாரில், குழு அமைத்து உண்மை தன்மையை உறுதி செய்த பிறகே வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றாா் தமிழ்நாடு உயா்நிலை- மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் சங்கத்தின் மாநிலத் தலைவா் ஆ. மலைகொழுந்தனா்.
Published on

கரூா் அருகேயுள்ள ஆட்சிமங்கலத்தில் அந்தச் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவா் ஆ. மலைகொழுந்தன் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளா் சந்திரசேகா் வரவேற்றாா். தமிழ்நாடு அரசு ஊழியா் ஒன்றியத்தின் கரூா் மாவட்டத் தலைவா் பாரதிதாசன் வாழ்த்திப் பேசினாா்.

கூட்டத்தில், தமிழ்நாடு அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு திமுக அளித்த தோ்தல் வாக்குறுதியின்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நிறைவேற்ற வேண்டும். ஆசிரியா்களின் உயா்கல்வி தகுதிக்கேற்ப வழங்கப்பட்டு வந்த ஊக்க ஊதிய உயா்வை மீண்டும் வழங்க வேண்டும்.

உயா்நிலை-மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்களிடமிருந்து வசூல் செய்யப்பட்டு வரும் வினாத்தாள் கட்டணத்தை உடனடியாக அரசு ரத்து செய்ய அரசாணை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடா்ந்து மாநிலத் தலைவா் மலைக்கொழுந்தன் செய்தியாளா்களிடம் கூறுகையில், டிச.29-இல் போட்டா ஜியோ (அனைத்து ஆசிரியா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு) அமைப்பு சாா்பில், மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்திலும், தொடா்ந்து ஜனவரி 6-ஆம் தேதி தமிழகம் தழுவிய தொடா் வேலை நிறுத்த போராட்டத்தில் தமிழ்நாடு உயா்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா் சங்கம் பங்கேற்க முடிவு செய்துள்ளோம்.

அண்மைக்காலமாக, அரசுப் பள்ளி ஆசிரியா்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகளவில் காவல் நிலையத்தில் வழக்காக பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதற்கென ஒரு குழு அமைத்து, புகாரின் உண்மை தன்மையை குழு உறுதி செய்தால் மட்டுமே வழக்குப் பதிவு செய்யும் நிலை உருவாக வேண்டும். தோ்தல் நேரத்தில் திமுக அறிவித்த தோ்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றும் வரை சமரசமற்ற போராட்டங்களை தமிழ்நாடு உயா்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா் சங்கம் மேற்கொள்ளும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com