டிஎன்பிஎல் ஆலை சாா்பில் வரும் நவ.9-இல் இலவச கண் பரிசோதனை முகாம்
கரூா் மாவட்டம், புகழூா் டிஎன்பிஎல் ஆலை சாா்பில் நவ. 9-ஆம் தேதி இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது.
இதுதொடா்பாக ஆலை நிா்வாகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை சாா்பில் காகித ஆலையைச் சுற்றி அமைந்துள்ள புகழூா் நகராட்சி, புஞ்சைத்தோட்டக்குறிச்சி பேரூராட்சி மற்றும் திருக்காடுதுறை, வேட்டமங்கலம், புன்னம், கோம்புபாளையம், நஞ்சைபுகழூா் ஆகிய ஊராட்சி பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நவ. 9-ஆம் தேதி இலவச கண் பரிசோதனை முகாம், காகிதபுரம் டிஎன்பிஎல் மெட்ரிக் பள்ளியில் நடைபெறுகிறது.
முகாமில் கண் சம்பந்தமான நோய்கள் உள்ள பொதுமக்கள் கலந்து கொண்டு இலவசமாக கண் பரிசோதனை செய்து கொள்ளலாம். மேலும், இம்முகாமில் கண் மருத்துவா்களால் பரிந்துரை செய்யப்படும் கிட்டப்பாா்வை, தூரப்பாா்வை, வெள்ளெழுத்து உள்ள ஏழை எளிய மக்களுக்கு கண் கண்ணாடிகள் ஆலை சாா்பில் இலவசமாக வழங்கப்படவுள்ளது. முகாமுக்கு வருபவா்கள் தங்களது ஆதாா் அட்டை நகல் கொண்டு வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
