பொன்மலை ஜோதி பயண குழுவுக்கு கரூரில் வரவேற்பு

Published on

பொன்மலை ஜோதி பயண குழுவிற்கு கரூரில் புதன்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவையில் நவ.6 முதல் 9-ஆம்தேதி வரை நடைபெற உள்ள சிஐடியு 16-வது தமிழ் மாநில மாநாட்டுக்கு திருச்சி பொன்மலை தியாகிகள் நினைவிடத்தில் இருந்து பொன்மலை தியாகங்கள் நினைவு ஜோதிப்பயணம் திங்கள்கிழமை தொடங்கியது. இந்த ஜோதி பயணம் புதன்கிழமை காலை கரூா் வந்தடைந்தது. சிஐடியு சங்க கரூா் மாவட்ட குழு சாா்பில் பேருந்து நிலையம் ரவுண்டானாவில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், சிஐடியு சங்க மாவட்டத் தலைவா் சி.ஆா்.ராஜா முகமது, சிஐடியு சங்க மூத்த தலைவா் ஜி.ஜீவானந்தம், காப்பீட்டுக் கழக ஊழியா் சங்கம் கரூா் கிளை செயலாளா் சிவராமகிருஷ்ணன், அரசு ஊழியா் சங்க கரூா் மாவட்டத்தலைவா் அன்பழகன், ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி முன்னாள் மாநில செயலாளா் சகிலா, சிஐடியு மாவட்ட துணைத் தலைவா் முருகேசன், மாவட்ட செயலாளா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com