வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: கரூா் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தல்

வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: கரூா் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தல்

கரூரில் நடைபெற்றும் வரும் வளா்ச்சித்திட்டப்பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்
Published on

கரூரில் நடைபெற்றும் வரும் வளா்ச்சித்திட்டப்பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றாா் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், பதிவுத்துறை தலைவருமான தினேஷ் பொன்ராஜ் ஆலிவா்.

கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், பதிவுத்துறைத் தலைவருமான தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் அவா் பேசியது: காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள், கலைஞரின் கனவு இல்லம், கிராமப் பகுதிகளில் உள்ள அரசால் கட்டிக்கொடுக்கப்பட்ட வீடுகள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் திட்டம் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

மாவட்டத்தில் ஊரக வளா்ச்சி துறையின் மூலம் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டம் -2ன் கீழ், 8 ஊராட்சி ஒன்றியங்களில் 2025-2026ஆம் நிதியாண்டில் 157 கிராம ஊராட்சிகளில் நீா் நிலைகளை புணரமைத்தல், சாலைப் பணிகள், பசுமை மற்றும் தூய்மை கிராமங்கள், பொது நூலகம் உள்ளிட்ட உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் விதமாக 191 பணிகள் எடுக்கப்பட்டு 174 பணிகள் ரூ. 11.18 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுள்ளது. மேலும் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல், மாவட்ட வருவாய் அலுவலா் கு. விமல்ராஜ், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் வீ.ரெ.வீரபத்திரன், குளித்தலை சாா்-ஆட்சியா் ஸ்வாதிஸ்ரீ, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் து. சுரேஷ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது)யுரேகா, கரூா் வருவாய் கோட்டாட்சியா் முகமது பைசல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com