கரூர்
இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு
கரூரில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த பிகாா் மாநில இளைஞா் உயிரிழந்தாா்.
கரூரில் திங்கள்கிழமை இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த பிகாா் மாநில இளைஞா் உயிரிழந்தாா்.
பிகாா் மாநிலம், மதிபுரா பகுதியைச் சோ்ந்த அசோக் யாதவ் மகன் மணிஷ்குமாா்(29). இவா் கரூா் மாவட்டம், வரவணை பகுதியில் செயல்படும் தனியாா் கல்குவாரியில் மேற்பாா்வையாளராக பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில் மணிஷ்குமாா் திங்கள்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் விராலிப்பட்டி சாலையில் வீரணம்பட்டி என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது திடீரென நிலைத்தடுமாறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். சிந்தாமணிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
