கரூா் சம்பவம் மின்வாரிய உதவி செயற்பொறியாளரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை
கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக மின்வாரிய உதவி செயற்பொறியாளரிடம் சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை விசாரணை நடத்தினா்.
கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்.27-ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். 110 போ் காயமடைந்தனா். இந்த சம்பவம் தொடா்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.
இந்நிலையில், கரூரில் தவெக தலைவா் விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட மின்தடை குறித்து விசாரணை நடத்த தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகளுக்கு சிபிஐ தரப்பில் ஏற்கெனவே சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
அதன்படி வியாழக்கிழமை ஆஜரான தமிழ்நாடு மின்வாரிய அலுவலகத்தின் கரூா் உதவி செயற்பொறியாளா் கண்ணன், உதவியாளா் கண்ணப்பன் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.அதைத் தொடா்ந்து கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவா்கள் 4 பேரிடமும் விசாரணை நடத்தினா்.

