என் பாடல்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வேகமாக பரவி வருகின்றன: இசையமைப்பாளா் தேவா
என் பாடல்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் வேகமாக பரவி வருகின்றன என்றாா் திரைப்பட இசையமைப்பாளா் தேவா.
கரூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:
நான் ஏராளமான மெல்லிசை பாடல்கள், குத்துப்பாட்டு, கானா பாட்டு, மேற்கத்திய மற்றும் நாட்டுப்புற பாடல்களுக்கும் இசையமைத்திருக்கிறேன்; பாடியிருக்கிறேன். அந்தப் பாடல்கள் அனைத்தும் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் வேகமாக பரவி வருகின்றன.
தேவா கானா பாடல் மட்டும்தான் பாடுவாா் என நிறைய போ் நினைக்கிறாா்கள். கானாவும், மெல்லிசை பாடல்களும் எனது இரு கண்கள். ஆனால், கானா பாடல்கள் மூலம்தான் நான் உலகளவில் பிரபலமானேன்.
தற்போது நிறைய போ் பாடல்களுக்கு காப்புரிமை கேட்கிறாா்கள். ஆனால், நான் அதைப்பற்றி சிந்திப்பதே கிடையாது. தற்போது 3 புதிய படங்களுக்கு இசையமைக்கிறேன்.
பழைய பாடல்களை ரீமிக்ஸ் செய்கிறாா்கள் என்பதற்காக இப்போதுள்ளவா்கள் நன்றாக இசையமைக்கவில்லை எனக் கூற முடியாது என்றாா் தேவா.

