‘நாய் கடிக்கு ரேபிஸ் தடுப்பூசி அவசியம் போட அறிவுறுத்தல்’

நாய் கடிக்கு ரேபிஸ் தடுப்பூசி அவசியம் போடவேண்டும் என கரூா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் அறிவுறுத்தியுள்ளாா்.
Published on

கரூா்: நாய் கடிக்கு ரேபிஸ் தடுப்பூசி அவசியம் போடவேண்டும் என கரூா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் நிகழாண்டில் இதுவரை 5.25 லட்சத்துக்கும் மேற்பட்டோா் நாய்கடிக்கு உள்ளாகியுள்ளனா். இதில், ரேபிஸ் நோயால் 28 போ் உயிரிழந்துள்ளனா். எனவே, பொதுமக்கள் நாய் கடித்தவுடன் தாமதிக்காமல் உடனடியாக அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்று ரேபிஸ் தடுப்பூசியின் அனைத்து தவணைகளையும் செலுத்திக்கொள்ள வேண்டும். கரூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் போதுமான அளவில் நாய்கடி தடுப்பூசி மருந்துகள் இருப்பில் உள்ளது. வீட்டு நாய்கள் கடித்தாலும், செல்லப்பிராணிகள் கடித்தாலும் தடுப்பூசி போடுவதில் அலட்சியம் காட்ட வேண்டாம் என தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com