

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிக்கி உயிரிழந்தவரின் மனைவி, தவெக தலைவர் விஜய் அளித்த நிவாரண நிதி ரூ.20 லட்சத்தை திங்கள்கிழமை திருப்பி அனுப்பினார்.
கரூரில் செப். 27-இல் நடைபெற்ற தவெக பிரசாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி கோடங்கிப்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரும் உயிரிழந்தார். இதையடுத்து விஜய் சார்பில் ரமேஷின் மனைவி சங்கவியின் வங்கிக் கணக்குக்கு கடந்த 19-ஆம் தேதி ரூ. 20 லட்சம் நிவாரண நிதி அனுப்பிவைக்கப்பட்டது.
இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை விஜய் திங்கள்கிழமை சென்னைக்கு வரவழைத்து சந்தித்தார். இதனிடையே சங்கவிக்குத் தெரியாமல் அவரது உறவினர்கள் 3 பேரை தவெக நிர்வாகிகள் அங்கு அழைத்துச் சென்றதால், அதிருப்தியடைந்த சங்கவி, விஜய் அனுப்பிவைத்த ரூ.20 லட்சம் நிதியை பெறப்பட்ட வங்கிக் கணக்குக்கே திருப்பி அனுப்பினார்.
இதுதொடர்பாக சங்கவி மேலும் கூறியதாவது: “உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை விஜய், கரூருக்கு நேரில் வந்து ஆறுதல் கூறுவதாகத் தெரிவித்திருந்தார்.
ஆனால் அவர் கரூருக்கு வரவில்லை. நான் எதிர்பார்த்தது ஆறுதல் மட்டுமே: பணத்தை அல்ல. இதனால் பணத்தை திருப்பி அனுப்பியுள்ளேன்” என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.